search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரட்டன்: ராணுவ வீரர்களை காப்பாற்றிய நாய்க்கு விருது
    X

    பிரட்டன்: ராணுவ வீரர்களை காப்பாற்றிய நாய்க்கு விருது

    பிரட்டனில் ஆப்கானிஸ்தான் போரின்போது ராணுவ வீரர்களை காப்பாற்றிய மாலி என்னும் நாய்க்கு அந்நாட்டில் விலங்குகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான டிக்கென் விருது வழங்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    பிரட்டனில் ராணுவத்தில் வீரர்களுக்கு உதவும் விலங்குகளை கவுரவப்படுத்துவதற்காக டிக்கென் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1943-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. முதன்முறையாக இரண்டாம் உலக போரில் உதவிய மூன்று புறாக்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டிற்க்கான விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு தலிபான்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் எதிரிகள் வைத்திருந்த கண்ணிவெடிகளை கண்டறிந்து பல ராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றிய மாலி எனப்படும் நாய்க்கு இந்த ஆண்டிற்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின்போது மூன்று முறை கண்ணிவெடியில் சிக்கி கால்கள் மற்றும் மார்பு பகுதியில் காயமடைந்தும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வீரர்களின் உயிரை காப்பாற்றிய மாலியில் செயல் சுத்த வீரத்தின் வெளிபாட்டை குறிக்கிறது என இந்த விருதை வழங்கிவரும் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மாலியின் தற்போதைய பராமரிப்பாளர் கூறுகையில், “மாலியை நினைத்து பெருமைப்படுகிறேன். அந்த போரில் வெற்றி பெற மாலியின் செயல் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. மாலிக்கு வழங்கப்பட்ட டிக்கென் பதக்கம் அன்றைய தினம் மாலி ராணுவ வீரர்களுக்கு செய்த உதவிகளுக்கு கிடைத்த அங்கீகரிக்கிறது”, என கூறினார்.
    Next Story
    ×