search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளிமண்டலத்துடன் பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு
    X

    வளிமண்டலத்துடன் பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு

    விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிதாக பூமியை போன்ற ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏராளமான கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது புதிதாக ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது.

    இப்புதிய கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையம் என்ற கிரகங்களை ஆய்வு செய்யும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ராஸ் 128 ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது.

    இதில் விசே‌ஷம் என்னவென்றால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது. இக்கிரகம் பூமியைவிட 1.38 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 11 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

    இது சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இந்த கிரகம் அதன் வளிமண்டலத்தில் அமைந்துள்ள ஒரே கோளாகும். மேலும் அதன் வளிமண்டலத்தின் சூரியனுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது பற்றிய ஆய்வு நடக்கிறது.

    இந்தாண்டு மட்டும் பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடிய ஏழு கோள்களை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. இதுவரை சுமார் 24க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
    Next Story
    ×