search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சியா?: தலைநகரை சுற்றி பீரங்கிகளுடன் வீரர்கள் குவிப்பு
    X

    ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சியா?: தலைநகரை சுற்றி பீரங்கிகளுடன் வீரர்கள் குவிப்பு

    ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வே தலைநகர் ஹரரே நகரை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அரசு ஊடக தலைமையகத்தை ராணுவம் சிறைப்பிடித்துள்ளதால் ராணுவ புரட்சிக்கு அடித்தளமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    ஹரரே:

    ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகபே (93) அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான ராணுவ வீரர்கள் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர்.

    அப்போது, துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதாகவும், பீரங்கியால் சுடும் சப்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அந்நாட்டு அரசு ஊடக தலைமையகத்தையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.

    அதிபர் ராபர்ட் முகபே

    அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை கடந்த வாரம் பதவி நீக்கம் செய்தார் முகபே. இதனால், அவர் ராணுவ தளபதி ஜெனரல் சிவெங்கா உதவியுடன் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ‘அரசை கைப்பற்றும் நோக்கமில்லை’ என ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். குற்றவாளிகளை மட்டுமே ராணுவம் குறிவைத்துள்ளது எனவும், அதிபர் முகபே மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    ஜிம்பாப்வேயில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதால் தங்களது நாட்டவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
    Next Story
    ×