search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேஷியா அருங்காட்சியகத்தில் இருந்த ஹிட்லரின் மெழுகுச்சிலை நீக்கம்
    X

    இந்தோனேஷியா அருங்காட்சியகத்தில் இருந்த ஹிட்லரின் மெழுகுச்சிலை நீக்கம்

    இந்தோனேசியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஹிட்லரின் மெழுகுச்சிலை பல போராங்களுக்கு பின்னர் நீக்கப்பட்டதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஜகார்தா:

    இந்தோனேசியாவில் உள்ள டி மாட்டா டிரிக் ஐ என்ற அருங்காட்சியம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பல வரலாற்று சிறப்பு மிக்க சிலைகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளன. பல உலக பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் உள்ளன. அவற்றின் அருகில் நின்று பார்வையாளர்கள் செல்பீ எடுத்துக்கொள்கின்றனர். இதனால் அந்த அருங்காட்சியகம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.


    இந்த மியூசியத்தில் ஜெர்மன் நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லரின் மெழுகுச்சிலை இடம்பெற்றுள்ளது. அதன் அருகில் இருந்து புகைப்படம் எடுக்க பலரும் ஆர்வம் காட்டுவர். சிலையின் பின்புறம் ஆஷ்விட்ச் முகாமின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. முகாமின் வாசலில் மெழுகுச்சிலை இடம்பெற்றுள்ளது.

    அதற்கு பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி. அவர் ஆட்சியில் பல யூதர் இனத்தைச் சேர்ந்த மக்கள் இந்த முகாமில் வைத்து கொல்லப்பட்டனர். அவர் சிலையை இங்கு வைத்திருப்பது அவர்களை அவமதிப்பதாகும். அதனால் சிலையையும்,புகைப்படத்தையும் நீக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வந்தனர்.


    இந்நிலையில்,  ஹிட்லரின் மெழுகுச்சிலையை நீக்கிவிட்டதாக இந்தோனேசியா அருங்காட்சியக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த சிலை 2014 ம் ஆண்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×