search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிலாவில் ஆசியான் மாநாடு தொடங்கியது - சர்வதேச அரிசி ஆய்வு கூடத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார்
    X

    மணிலாவில் ஆசியான் மாநாடு தொடங்கியது - சர்வதேச அரிசி ஆய்வு கூடத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார்

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசியான் மாநாடு தொடங்கியது. லாஸ் பனாஸ் பகுதியில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தின் புதிய ஆய்வு கூடத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசியான் மாநாடு இன்று தொடங்கியது.

    அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

    இன்று நடந்த தொடக்க விழாவின்போது 10 நாடுகளின் தலைவர்கள் ஒருவரையொருவர் கைகோர்த்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். ‘ஆசியான்’ மாநாட்டில் வித்தியாசமாக தலைவர்கள் ஒருவரை ஒருவர் கைகோர்ப்பது வழக்கம்.

    ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதன் முறையாக கலந்து கொள்வதால் கைகளை கோர்ப்பதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவருக்கு அதுகுறித்து விளக்கப்பட்டது. அதையடுத்து சிரித்துக் கொண்டே கைகொடுத்தார்.

    மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் நாட்டில் லாஸ் பனாஸ் என்ற இடத்தில் உள்ள  சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்றார். அங்கு மண்வெட்டியால் மண்ணை வெட்டி புதிய ஆய்வு கூடத்துக்கான கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர், இந்திய விஞ்ஞானிகளை சந்தித்தார். அப்போது அவர்கள் சிறப்பு நெல் ரகங்கள் குறித்தும் அதனால் இந்திய விவசாயிகளுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கினார்கள்.



    அப்போது 14 முதல் 18 நாட்கள் வரை வெள்ள நீரில் மூழ்கியிருந்தாலும் அழுகாமல் தாக்கு பிடிக்கும் நெல் வகைகள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. அதை வெகுவாக பாராட்டிய பிரதமர் மோடி இந்திய விவசாயிகளுக்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றார்.



    மேலும், இந்தியாவில் இருந்து கொண்டுசென்ற இரு நவீன நெல்வகை மாதிரிகளை அந்த ஆய்வு கூடத்துக்கு பிரதமர் மோடி அன்பளிப்பாக வழங்கினார்.



    Next Story
    ×