search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாழன் போன்று 13 மடங்கு மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு
    X

    வியாழன் போன்று 13 மடங்கு மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு

    வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பிரம்மாண்டமான மிகப் பெரிய புதிய கிரகத்தை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. விண் வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்கல் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது பிரம்மாண்டமான மிகப் பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இது வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியது.

    அதற்கு ‘ஒ.ஜி.எல்.இ- 2016-பி.எல்.ஜி-1190 எல்.பி.’ என பெயரிடப்பட்டுள்ளது. இக்கிரகத்தை ‘ஸ்பிட்சர்’ விண்வெளி டெலஸ்கோப் மூலம் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 22 ஆயிரம் ஒளி தூரத்தில் உள்ளது. இதற்கு துணைகிரகம் எதுவும் உள்ளதா என கண்டறியப்படவில்லை. அதன் அருகே மிக குட்டையான பிரவுன் நிறத்தில் ஒரு பொருள் தெரிகிறது. அது துணை கிரகமா என உறுதியாக தெரியவில்லை.
    Next Story
    ×