search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவூதி: கைது செய்யப்பட்ட இளவரசர்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் சிறை
    X

    சவூதி: கைது செய்யப்பட்ட இளவரசர்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் சிறை

    உலக கோடீஸ்வரர் அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    ஜெட்டா:

    மன்னராட்சி நடைபெற்று வரும் சவூதி அரேபியாவில் மந்திரிகள் உள்பட பல முக்கிய பொறுப்புகளை அரச குடும்பத்தினரே வகித்து வந்தனர். மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றதும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    உலக அரங்கில் சவூதி அரேபியாவின் மீது உள்ள பழமைவாத கருத்துக்களை மாற்றும் வகையில் சில முக்கிய நடவடிக்கைகளை பட்டத்து இளவரசர் எடுத்தார். அரச குடும்பத்தினரே ஊழலில் ஈடுபட்டாலும் கடும் தண்டனை இருக்கிறது என அவர் அறிவித்தார்.



    பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான்

    பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் சல்மான் அறிவித்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மந்திரிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் ரியாத்தில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் என்ற பிரம்மாண்ட சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதற்கேற்ப, ஹோட்டல் இணையதளத்தில் தற்போதைக்கு அறைகளுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், ஹோட்டலின் தரைத்தளத்தில் பாதுகாவலர்கள் தங்கியிருப்பது, ஆயுதங்களை வைத்திருப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளன.

    Next Story
    ×