search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாலியில் உயர்நீதிமன்ற தலைவரை குறிவைத்து தாக்குதல்: 6 பேர் பலி
    X

    மாலியில் உயர்நீதிமன்ற தலைவரை குறிவைத்து தாக்குதல்: 6 பேர் பலி

    மாலியில் உயர்நீதிமன்ற தலைவரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

    பமாகோ:

    ஆப்பிரிக்க நாடான மாலி பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தற்போது தீவிரவாதிகள் அங்கு தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

    மாலி உயர்நீதிமன்ற தலைவராக அப்திராமேனே நியாங் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 1999-ம் ஆண்டு முதல் இந்த பதவியில் இருந்து வருகிறார். மாலியின் வடகிழக்கில் அமைந்துள்ள மொப்தி பகுதியில் உள்ள தியா நகரில் இருந்து தியாபரப் நகருக்கு நியாங் பயணம் செய்துள்ளார். 

    அப்போது அவரது வாகனம் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்களும், நியாங் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரும் உயிரிழந்தனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நியாங் மற்றும் அவரது மனைவியை ராணுவத்தினர் பத்திரமாக காயமின்றி மீட்டனர் எனவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×