search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணுசக்திக்கு எதிராக தென்கொரியாவுடன் இணைந்து செயல்பட தயார்: சீனா அறிவிப்பு
    X

    அணுசக்திக்கு எதிராக தென்கொரியாவுடன் இணைந்து செயல்பட தயார்: சீனா அறிவிப்பு

    கொரிய தீபகற்பத்தில் அணுசக்திக்கு எதிராக தென்கொரியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    பீஜிங்:

    சமீப காலமாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா இந்த சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர் நிகழும் அபாயம் அதிகரித்துள்ளது.

    வடகொரியாவுக்கு சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் மறைமுகமாக ஆதரவளித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இதுகுறித்து சீனா மற்றும் ரஷியா எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது. இருப்பினும் கொரிய தீபகற்பத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டும் என்றும், அமெரிக்கா தனது படைகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தி வருகிறது.

     லீ டூ-ஹேன்(தென்கொரியா)

    இந்நிலையில், கொரிய தீபகற்பத்தில் அணுசக்திக்கு எதிராக தென்கொரியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை மந்திரி காங் சூவான்யூ தெரிவித்துள்ளார். தூதரக பேச்சுவார்த்தை மூலம் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலைநாட்டப்படும் என அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தென்கொரிய வெளியுறவுத்துறை மந்திரி லீ டூ-ஹேன்னுடன் பீஜிங்கில் நேற்று நடந்த அணுசக்திக்கு எதிரான  பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.


    காங் சூவான்யூ (சீனா)

    Next Story
    ×