search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு
    X

    இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

    இந்தோனேசியாவில் உள்ள அம்பான் என்ற தீவின் அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஜகர்தா:

    இந்தோனேசியாவில் உள்ள அம்பான் என்ற தீவின் அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.

    இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்றும் அங்கு பூகம்பம் ஏற்பட்டது. சுமத்ராவை யொட்டியுள்ள அம்பான் என்ற தீவின் அருகே கடலில் நிலநடுக்க மையம் இருந்தது. கடலுக்கு அடியில் 32 கிலோ மீட்டர் ஆழத்தில் அதன் மையப்புள்ளி அமைந்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானது.

    இந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினார்கள். தொடர்ந்து ஐந்து முறைக்கு மேல் நில அதிர்வுகளை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எந்த தகவல் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×