search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எகிப்து நாட்டில் 12 தீவிரவாதிகள் கொன்று குவிப்பு
    X

    எகிப்து நாட்டில் 12 தீவிரவாதிகள் கொன்று குவிப்பு

    எகிப்து நாட்டில் மேற்கு பாலைவன பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதில் 12 தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் இயங்கி வருகிற மத அடிப்படையிலான தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

    கடந்த வாரம், கெய்ரோ நகருக்கு தென்மேற்கில் பஹாரியா பாலைவனச்சோலை அருகே தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் கூட்டாக ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீசார், பாதுகாப்பு படையினர் 53 பேர் கொல்லப்பட்டனர்.

    எகிப்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு தீவிரவாதிகள் மீது ராணுவம் அதிரடி நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.



    இந்த நிலையில், மேற்கு பாலைவன பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதில் 12 தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இது மத அடிப்படையிலான தீவிரவாதிகளுக்கு விழுந்த பலத்த அடியாக கருதப்படுகிறது.

    இந்த தகவலை கெய்ரோ நகரில் எகிப்து அரசின் மேனா செய்தி முகமை நேற்று வெளியிட்டது.
    Next Story
    ×