search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாஷிங்டன் சாலைகளை விட மத்திய பிரதேச சாலைகள் சூப்பர்: அமெரிக்காவில் சவுகான் பேச்சு
    X

    வாஷிங்டன் சாலைகளை விட மத்திய பிரதேச சாலைகள் சூப்பர்: அமெரிக்காவில் சவுகான் பேச்சு

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகர சாலைகளைவிட மத்திய பிரதேச சாலைகள் சிறப்பாக இருப்பதாக அங்கு சென்றுள்ள முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பேசியுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகர சாலைகளைவிட மத்திய பிரதேச சாலைகள் சிறப்பாக இருப்பதாக அங்கு சென்றுள்ள முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பேசியுள்ளார்.

    மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகன் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இந்திய வம்சாவளியினரின் கூட்டத்திற்கு சென்று பேசி வருகிறார். இந்நிலையில், இன்று வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மத்திய பிரதேசத்தின் சாலைகளை வெகுவாக புகழ்ந்தார்.

    வாஷிங்டன் விமான நிலையத்தில் இறங்கி சாலைகளில் செல்லும் போது, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாலைகள் வாஷிங்டன் சாலையை விட சிறப்பாக இருப்பதாக நான் உணர்ந்தேன் என்று சவுகான் கூறினார்.

    நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஜி.எஸ்.டி என்பது திருப்புமுனையான வரி சீரமைப்பு முறை என்றும் அவர் பேசியுள்ளார்.
    Next Story
    ×