search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ரோபோ’க்கள் ஒரே நேரத்தில் நடனமாடிய காட்சி
    X
    ‘ரோபோ’க்கள் ஒரே நேரத்தில் நடனமாடிய காட்சி

    வடகொரியாவில் 1069 ரோபோக்கள் நடனம்: கின்னஸ் சாதனை படைத்தது

    வடகொரியாவில் 1069 ரோபோக்கள் தொடர்ந்து ஒலிபரப்பான பாடல்களுக்கு ஒரே மாதிரி நடனம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன் மூலம் வடகோரியா கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
    சியோல்:

    உலகின் எதிர்காலம் ‘ரோபோ’க்கள் கைகளில் தான் உள்ளது என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ‘ரோபோ’க்கள் ‘செயற்கை அறிவு’ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகின்றன.

    இந்த தொழில்நுட்பத்தை வைத்து பல வித்தியாசமான செயல்களை செய்ய முடியும். இந்த நிலையில் வடகொரியாவில் மேற்கண்ட தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட 1069 ‘ரோபோ’க்கள் ஒரே நேரத்தில் நடனமாடின.

    தொடர்ந்து ஒலிபரப்பான பாடல்களுக்கு ஒரே மாதிரி நடனம் ஆடி இந்த ‘ரோபோ’க்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவை தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொண்டு புதுபுது ஸ்டைலில் நடனம் ஆடின.

    ‘எந்திரன்’ சினிமா படத்தில் நிறைய சிட்டி ‘ரோபோ’க்கள் ஒன்றாக சேர்ந்தும், பிரிந்தும் பிரமிப்பை ஏற்படுத்தியது. அது தற்போது உண்மையாகவே நடந்துள்ளது.

    இதன் மூலம் வடகொரியா கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இச்சாதனையை ஒருங்கிணைந்த அறிவியலாளர் இவான் முஸ்க் நிகழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×