search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீட்பு
    X

    கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீட்பு

    மர்ம நபரால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தனியார் பத்திரிக்கையில் ஜீனத் ஷாஜாதி என்ற பெண் பணி புரிந்து வந்தார். இவர் கடந்த 2013 ம் ஆண்டு  மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

    கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஹமித் அன்சாரி அத்துமீறி பாகிஸ்தானில் நுழைந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் நவம்பர் மாதம் வரை தலைமறைவாக இருந்தார். அதன்பின் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. அவர் இன்னும் சிறையில் உள்ளார்.



    அன்சாரிக்கு உதவி செய்யும் வகையில், அவருக்கு ஆதரவாக ஜீனத் வழக்கு தொடர்ந்தார். இதனால் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அந்த வழக்கை நடத்தக் கூடாது என மர்ம நபர்கள் மிரட்டியுள்ளனர். அதையும் மீறி ஜீனத் அன்சாரிக்கு உதவி செய்துள்ளார். இதனால் அவரை மர்ம நபர்கள் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடத்தினர். ஜீனத்தை மீட்கும் பணியில் அரசு ஈடுபட்டது.



    அவர்களின் தீவிர முயற்சியினால், இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஜீனத்தை கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் போலீசார் மீட்டனர். அவர் லாகூரில் உள்ள தனது குடும்பத்துடன் சேர்க்கப்பட்டார். ஜீனத்தின் கடத்தலால் அவரது சகோதரர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×