search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான்: மசூதிகளை குறிவைத்து நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலி
    X

    ஆப்கானிஸ்தான்: மசூதிகளை குறிவைத்து நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் இரு மசூதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் உள்ளது. இவர்களை ஒடுக்குவதற்கு அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடமெற்கு ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்திற்கு உட்பட்ட தாவ்லினா மாவட்டத்தில் உள்ள மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 20 பேர் பலியாகினர். ஆனால் 30-க்கும் அதிகமானோர் பலியானதாக முதலில் தகவல்கள் வெளியாகின.

    இதேபோல், காபுலில் உள்ள மசூதியிலும் தற்கொலைப்படை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் தொழுகைக்கு வந்திருந்தவர்கள் உள்பட 30 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 41 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இரண்டு மசூதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×