search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் மசூதியை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்: 30 பேர் பலி
    X

    ஆப்கானிஸ்தானில் மசூதியை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்: 30 பேர் பலி

    ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதியை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர் என தகவல் கிடைத்துள்ளது.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் உள்ளது. இவர்களை ஒடுக்குவதற்கு அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடமெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணத்திற்கு உட்பட்ட தாவ்லினா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிக அளவிலான மக்கள் வந்துள்ளனர். அப்போது மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் அப்பகுதியில் இருந்த ராணுவ கமாண்டர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    தீவிரவாதிகளின் இந்த கொலைவெறி தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 30-க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×