search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை
    X

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் அடுத்த வாரம் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு வருகை தரவுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் அடுத்த வாரம் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு வருகை தரவுள்ளார்.

    ஒருவார பயணமாக நாளை (21-ம் தேதி) வாஷிங்டன் நகரில் இருந்து புறப்படும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், தனது அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக சவுதி அரேபியா நாட்டுக்கு செல்கிறார்.

    ஈராக்-சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையிலான முதல் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் ரெக்ஸ் டில்லர்சன், ஏமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் அரசியல் நிலவரம் தொடர்பாக சவுதி நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர், கத்தார் தலைநகர் தோஹாவுக்கு செல்லும் அவர், ஈரான் - ஈராக் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர், பாகிஸ்தானுக்கு செல்லும் ரெக்ஸ் டில்லர்சன் இறுதியாக இந்தியா வருகிறார். அவர் இந்தியாவுக்கு வரும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


    Next Story
    ×