search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன்முறை, நோய்களைவிட சுற்றுச்சூழல் மாசுபாட்டால் அதிக மக்கள் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    X

    வன்முறை, நோய்களைவிட சுற்றுச்சூழல் மாசுபாட்டால் அதிக மக்கள் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    உலகில் போர் மற்றும் வன்முறை மற்றும் நோய்களை விட சுற்றுச்சூழல் மாசுபாட்டால் அதிகமானோர் இறப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
    நியூயார்க்:

    உலகில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுதோறும் அதிக அளவில் மக்கள் மரணமடைகின்றனர். இந்த எண்ணிக்கை புகைப்பிடித்தல், பட்டினி, இயற்கை பேரிடர், போர்கள் மற்றும் பயங்கரமான நோய்களால் ஏற்படும் மரணத்தை விட அதிகமாக உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    2015-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலகில் மரணமடையும் ஆறில் ஒருவர் நச்சு வெளிப்பாட்டால் ஏற்பட்ட நோயால் இறந்ததாக லான்சட் மருத்துவ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த ஆய்வு முடிவுகள் குறித்து நியூயார்க்கின் இகான் மருத்துவ பள்ளியின் தலைமை மருத்துவர் கூறியிருப்பதாவது:-

    2015-ம் ஆண்டில் 9 மில்லியன் மக்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மரணமடைந்துள்ளனர். காற்று, நீர் மற்றும் நில மாசுபாட்டால் இறந்துள்ளனர். அதில் இந்தியாவில் 2.5 மில்லியன் மற்றும் சீனாவில் 1.8 மில்லியன் பேர் மாசுபாட்டால் இறந்துள்ளனர்.

    மாசுபாட்டால் இறப்பர்களின் எண்ணிக்கை புகைப்பிடித்தலால் இறப்பவர்களை விட ஒன்றரை மடங்கு அதிகமாகவும், நோய்களால் இறப்பவர்களை விட மூன்று மடங்கு அதிகமாகவும், சாலை விபத்துகளில் மரணமடைவர்களை விட 3 மடங்கு அதிகமாகவும் மற்றும் வன்முறையால் இறப்பவர்களை விட 15 மடங்கு அதிகமாகவும் உள்ளது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×