search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா உதவ வேண்டும் - நிக்கி ஹாலே வேண்டுகோள்
    X

    பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா உதவ வேண்டும் - நிக்கி ஹாலே வேண்டுகோள்

    பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா உதவ வேண்டும் என ஐ.நா.,விற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

    வாஷிங்டன்: 

    அமெரிக்கா - இந்தியா நட்புறவு கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஐ.நா.,விற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கலந்துகொண்டார். 

    அப்போது அவர் பேசியதாவது:-
     
    தீவிரவாதத்திற்கு எதிராகவும், அவர்களின் புகலிடங்களை ஒழிக்கவும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தீவிரவாதிகளின் கைகளில் அணுஆயுதம் செல்லாமல் இருக்க, ராணுவம் மற்றும் அனைத்து பொருளாதார ஒத்துழைப்புகளையும், அனைத்து நாடுகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

    இந்தியாவுடன் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். தீவிரவாதிகளை வளர்த்துவரும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அமெரிக்காவுக்கு, ஒரு காலத்தில் பாகிஸ்தான் சிறந்த நண்பனாக இருந்தது. இதனை நாங்கள் மதித்தோம். ஆனால், பாகிஸ்தான் அரசாக இருந்தாலும் அல்லது வேறு எந்த அரசாக இருந்தாலும் சரி, அமெரிக்கர்களை தாக்கும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் தருவதை ஒரு போதும் பொறுத்து கொள்ள முடியாது. இதனை இந்தியாவும் பாகிஸ்தானும் புரிந்து கொள்ள வேண்டும். 

    ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகளில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும். ஆப்கனின் நிலைத்தன்மைக்கு இந்தியா ஏற்கனவே முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த பிராந்தியத்தில் இரு நாடுகளும் எங்களுக்கு முக்கிய நட்பு நாடுகள். உள்கட்டமைப்பு மற்றும் நிதி விவகாரத்தில் மட்டுமல்லாமல், பாகிஸ்தானையும் கருத்தில் கொண்டு, ஆப்கன் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×