search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேன் புக்கர் பரிசை வெல்லும் இரண்டாவது அமெரிக்கர் ஜார்ஜ் சாண்டர்ஸ்
    X

    மேன் புக்கர் பரிசை வெல்லும் இரண்டாவது அமெரிக்கர் ஜார்ஜ் சாண்டர்ஸ்

    லிங்கன் இன் தி பார்டோ என்ற புத்தகத்துக்காக 2017-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் சாண்டர்ஸ் வென்றுள்ளார்.
    லண்டன்:

    லிங்கன் இன் தி பார்டோ என்ற புத்தகத்துக்காக 2017-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் சாண்டர்ஸ் வென்றுள்ளார்.

    உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது “மேன் புக்கர் பரிசு”.  இந்த விருது கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த மேன் புக்கர் விருதை இயன் மெக் ஈவன், ஐரிஸ் முர்டோச், சல்மான் ருஷ்டி உள்பட பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மேன் புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்கன் இன் தி பார்டோ என்ற புத்தகத்தை எழுதிய அமெரிக்கரான ஜார்ஜ் சாண்டர்சுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    இந்த புத்தக்கத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் அவரது 11 வயது மகன் இறப்பு பற்றியும், அமெரிக்காவின் போர்கள் பற்றியும் சாண்டர்ஸ் விரிவாக எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், மேன் புக்கர் விருதுக்காக மொத்தம் 144 நாவல்கள் பெறப்பட்டது. அதிலிருந்து ஜார்ஜ் சாண்டர்ஸ் எழுதிய இந்த புத்தக்கததை தேர்வு குழுவினர் சிறப்பானதாக தேர்வு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே கடந்த ஆண்டும் பால் பீட்டி என்ற அமெரிக்கர் மேன் புக்கர் பரிசை வென்றது குறிப்பிடத்க்கது.
    Next Story
    ×