search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாங்காங்கில் சமூக ஆர்வலர் நுழைய தடை: சீன தூதருக்கு இங்கிலாந்து சம்மன்
    X

    ஹாங்காங்கில் சமூக ஆர்வலர் நுழைய தடை: சீன தூதருக்கு இங்கிலாந்து சம்மன்

    சீனாவின் ஹாங்காங் நகரில் சமூக ஆர்வலர் பென் ரோஜர்ஸ் நுழைய தடை விதிக்கப்பட்டதற்கு இங்கிலாந்து அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
    லண்டன்:

    சீனாவின் ஹாங்காங் நகரில் சமூக ஆர்வலர் பென் ரோஜர்ஸ் நுழைய தடை விதிக்கப்பட்டதற்கு இங்கிலாந்து அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்தை சேர்ந்தவர் பென் ரோஜர்ஸ். சமூக ஆர்வலரான இவர் கடந்த 11-ம் தேதி சீனா நாட்டின் ஹாங்காங் நகருக்கு சென்றார். அப்போது அங்கு அவரை நுழைய விடாமல் சீன அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதனால் அவர் அங்கிருந்து திரும்பி விட்டார்.

    இந்நிலையில், சமூக ஆர்வலர் பென் ரோஜர்சை ஹாங்காங் நகரில் நுழைய விடாமல் தடுத்ததற்கு இங்கிலாந்தின் வெளியுறவு துறை அமைச்சகம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, வெளியுறவு துறை மந்திரி மார்க் பீல்டு பார்லிமெண்டில் கூறுகையில், பென் ரோஜர்சுக்கு ஹாங்காங் நகரில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து சீன தூதருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×