search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குர்திஸ்தான் போராளிகள் சிக்கி இருந்த பெட்ரோல் கிணறுகளை ஈராக் ராணுவம் மீட்டது
    X

    குர்திஸ்தான் போராளிகள் சிக்கி இருந்த பெட்ரோல் கிணறுகளை ஈராக் ராணுவம் மீட்டது

    ஈராக் நாட்டின் வடபகுதியில் உள்ள கிர்குக் மாகாணத்தில் குர்திஸ்தான் போராளிகள் சிக்கி இருந்த பெட்ரோல் வயல்களை ஈராக் ராணுவம் மீட்டது.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றிய குர்திஸ்தான் போராளிகள் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் வயல்களை மற்றும் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளை தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்துள்ளனர். நாளொன்றுக்கு சுமார் ஆறரை லட்சம் பீப்பாய் கச்சா எண்ணை உற்பத்தியாகும் இந்த தொழிலில் கிடைத்த லாபத்தை அவர்கள் அனுபவித்து வந்தனர்.

    ஈராக் அரசின் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த பெட்ரோல் கிணறுகளில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணையை அந்நாட்டு அரசு விற்கும் விலையைவிட மிக குறைந்த விலைக்கு குர்திஸ்தான் போராளிகள் விற்கின்றனர்.

    குர்திஸ்தான் போராளிகள் பிடியில் இருந்த கிர்குக் மீட்பதற்காக அமெரிக்க ராணுவத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையின் உதவியுடன் ஈரான் ராணுவத்தின் எலைட் படையினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர்.

    நேற்று கிர்குக் நகருக்குள் நுழைந்த அரசு படையினர் நகரின் மையப்பகுதியில் இருந்த விமான நிலையத்தை கைப்பற்றினர். பின்னர், மத்திய பகுதிக்கு முன்னேறி சென்ற வீரர்கள் கிர்குக் கவர்னர் மாளிகையை கைப்பற்றினர். ஈராக் பிரதமர் ஹடர் அல்-அபாடி உத்தரவுப்படி கவர்னர் மாளிகையில் இருந்த குர்திஸ்தான் கொடி இறக்கப்பட்டு அங்கு ஈராக் நாட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.

    அங்கிருந்து முன்னேறிச் சென்ற அரசுப் படைகள் கிர்குக் நகரில் உள்ள பாய் ஹஸ்ஸன் மற்றும் ஹவானா பெட்ரோல் வயல்களை இன்று கைப்பற்றினர்.

    கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பயந்து அரசுப் படைகள் அங்கிருந்து பின்வாங்கி சென்ற பின்னர், அன்றாடம் சுமார் இரண்டரை லட்சம் கச்சா எண்ணை உற்பத்தி செய்யும் இந்த இரு பெட்ரோல் வயல்களையும் குர்திஸ்தான் போராளிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×