search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்ச்சுகல் - ஸ்பெயின் நாடுகளில் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
    X

    போர்ச்சுகல் - ஸ்பெயின் நாடுகளில் காட்டுத்தீக்கு 30 பேர் பலி

    ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
    லிஸ்பன்:

    ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

    போர்ச்சுகல் நாட்டில் ஸ்பெயின் எல்லையையொட்டியுள்ள வனப்பகுதிகளில் நேற்றிலிருந்து சுமார் 520 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. இந்த தீயை அணைக்கும் பணியில் சுமார் 4500 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் காட்டுத்தீயில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பிரதமர் அன்ட்டோனியோ கோஸ்ட்டா தெரிவித்துள்ளார்.

    போர்ச்சுகல் எல்லையொட்டியுள்ள ஸ்பெயின் நாட்டு கலிசியா பகுதியிலும் சுமார் 17 காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. இங்கு மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றும் வீசுவதால் வேகமாக பரவிவரும் தீயில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். சுமார் 3 லட்சம் மக்கள் வாழும் இந்த பகுதியில் தீக்கு பயந்து வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் விளையாட்டு அரங்கங்களிலும், ஓட்டல்களிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×