search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக் நாட்டு எல்லைப்பகுதியை மூடியதாக வந்த செய்திக்கு ஈரான் மறுப்பு
    X

    ஈராக் நாட்டு எல்லைப்பகுதியை மூடியதாக வந்த செய்திக்கு ஈரான் மறுப்பு

    தனிநாடு கோரும் குர்திஸ்தான் பொது வாக்கெடுப்புக்கு பின்னர் ஈராக் நாட்டு வடக்கே உள்ள எல்லப்பகுதியை மூடி விட்டதாக வந்த செய்திக்கு ஈரான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
    டெஹ்ரான்:

    ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். குர்திஸ்தான் என்றழைக்கப்படும் இந்தப் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க அம்மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இக்குழுக்களில் பிகேகே எனப்படும் குர்துக்கள் தொழிலாளர் கட்சியினர் ஆயுதமேந்திய போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்து விட்டது. ஈராக் துண்டாக பிரிவதை அனுமதிக்க மாட்டேன் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    தனி நாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்த குர்து மக்கள் முடிவெடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக இஸ்ரேல் கூறியது. இதற்கான தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனி நாடு கோரிக்கைக்கான ஆதரவு பெருகி வந்தது.

    பரபரப்பான சூழ்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஈராக்கை விட்டு வெளியேறும் தனிநாடு முடிவை ஆதரித்து பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருந்தனர்.

    இதையடுத்து, ஈராக் நாட்டு வட பகுதியில் உள்ள எல்லப்பகுதியை ஈரான் மூடி விட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின. இந்த செய்திக்கு ஈரான் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.

    நாங்கள் முன்னரே அறிவித்திருந்ததைப்போல் ஈராக் மைய அரசு கேட்டு கொண்டதற்கிணங்க குர்திஸ்தான் பகுதிக்குட்பட்ட வான் எல்லையை மட்டுமே நாங்கள் மூடியுள்ளோம். இதுதவிர எல்லைப்பகுதி விவகாரத்தில் புதிதாக ஒன்றும் நடந்து விடவில்லை என ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பஹ்ரம் காசிமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×