search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களில் 50 பேர் பலி
    X

    சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களில் 50 பேர் பலி

    சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

    இந்நிலையில், தெய்ர் எஸோர் மாகாணத்தையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இதன் காரணமாக அங்கு வசித்துவந்த மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் சிரியாவின் வடகிழக்கு நகரான ஹஸ்சாகேவில் அவ்வப்போது சந்துத்து வந்துள்ளனர்.

    அவ்வாறு சந்திக்கும் பொதுமக்களை குறிவைத்து நேற்று ஐ.எஸ். தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். மூன்று கார் வெடிகுண்டுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குர்திஷ் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் உட்பட சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என குர்திஸ்தான் மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக தெய்ர் எஸோர் மாகாணத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாக சிரியாவில் செயல்பட்டுவரும் பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
    Next Story
    ×