search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணு ஆயுதங்கள் சட்டவிரோதமானது - அமெரிக்கா, வடகொரியாவுக்கு ஐகேன் அமைப்பு அறிவுரை
    X

    அணு ஆயுதங்கள் சட்டவிரோதமானது - அமெரிக்கா, வடகொரியாவுக்கு ஐகேன் அமைப்பு அறிவுரை

    அணு ஆயுதங்கள் சட்டவிரோதமானது என்பதை உணரவேண்டுமென அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஐகேன் அமைப்புத் தலைவர், அமெரிக்க மற்றும் வடகொரிய அதிபர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

    ஜெனிவா:

    2017-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ‘ஐகேன்’ அமைப்பு தேர்வாகியுள்ளது. அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ‘ஐகேன்’ அமைப்புடன் உலக நாடுகளில் அணு ஆயுதங்களை ஒழிக்கவும், அணு ஆயுதங்களால் ஏற்படும் மிகப்பெரிய பேரழிவை சுட்டிக்காட்டியும் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்த அமைப்பின் தலைவர் பிட்ரைஸ் ஃபின் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் ஆகியோருக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார். அதில், “அணு ஆயுதங்கள் சட்டவிரோதமானது. அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என மிரட்டுவதும் சட்டவிரோதமானது. அணு ஆயுதங்களை சொந்தமாக வைத்துக்கொள்வதும், புதிதாக உருவாக்குவதும் சட்டவிரோதமானது தான், அவற்றை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்”, என அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×