search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எத்தியோப்பியா சென்றடைந்தார்
    X

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எத்தியோப்பியா சென்றடைந்தார்

    இந்தியாவின் ஜனாதிபாதியாக பதவி ஏற்ற பின்னர் முதன்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ராம்நாத் கோவிந்த் இன்று எத்தியோப்பியா சென்றடைந்தார்.
    அடிடாஸ் அபாபா:

    ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் தலைமைபீடமாக திகழும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் தலைமைபீடமாக திகழும் எத்தியோப்பா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் 500-க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் உள்ளன.

    உலகின் பல பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் சீனா ஆப்பிரிக்காவில் உள்ள ஜிபோட்டி நகரில் புதிதாக ராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவின் ஜனாதிபாதியாக பதவி ஏற்றுகொண்ட ராம்நாத் கோவிந்த் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று
    ஜிபோட்டி சென்றடைந்தார். ஜிபோட்டியுடன் நிரந்தர தூதரக தொடர்பு குறித்து இந்தியாவும் அந்நாட்டும் இன்று உடன்படிக்கையில் கையொப்பமிட்டன.

    அங்கிருந்து எத்தியோப்பியா நாட்டுக்கு புறப்பட்ட ராம்நாத் கோவிந்த் இன்று அந்நாட்டின் தலைநகரான அடிடா அபாஸ் சென்றடைந்தார். முன்னாள் ஜனாதிபதி மறைந்த வி.வி. கிரியின் வருகைக்குப் பிறகு சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னர் எத்தியோப்பியா நாட்டுக்கு சென்றுள்ள இந்திய ஜனாதிபதி என்ற முறையில் அடிடா அபாஸ் விமான நிலையத்தில் ராம்நாத் கோவிந்த்க்கு எத்தியோப்பியா ஜனாதிபதி முலாட்டு டெஷ்ஷோம் சிறப்பான சிறப்பான வரவேற்பு அளித்தார்.

    இந்த பயணத்தின்போது இந்தியா - எத்தியோப்பியா நாடுகளுக்கு இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 6-ம் தேதிவரை அங்கு தங்கி இருக்கும் ஜனாதிபாதி ராம்நாத் கோவிந்த், அங்குள்ள இந்திய சமூகத்தாருடன் சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    எத்தியோப்பியா நாட்டில் மூன்று சர்க்கரை ஆலைகள் அமைக்கும் திட்டத்துக்காக இந்தியா சுமார் 100 கோடி டாலர்கள் அளவுக்கு நிதியுதவி செய்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற வர்த்தக பரிவர்த்தனை சுமார் 100 கோடி டாலர்கள் ஆகும்.  

    இதுதவிர இந்தியாவிடம் அதிகமான நிதியுதவியை பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் எத்தியோப்பியா முதலிடம் வகிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×