search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு
    X

    இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு

    உலகின் உயர்ந்த விருதான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    ஸ்டாக்ஹோம்: 

    இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தற்போது தொடங்கி உள்ளது. இந்தாண்டிற்கான பரிசுகளை நோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்து வருகிறார். நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

    இன்று 2017ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசானது 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஈர்ப்பு விசை அலைகள் பற்றிய கண்டுபிடிப்புக்காக ரெய்னர் வேயிஸ், பேரி சி.பேரிஷ், கிப்ஸ் எஸ்.துரோன் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பை உறுதி செய்ததற்காக மூவருக்கும் இந்த விருது அளிக்கப்படுகிறது. லிகோ என்ற கருவி மூலம் இந்த கண்டுபிடிப்பை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

    பேரி சி.பேரிஷ் மற்றும் கிப்ஸ் எஸ்.துரோன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ரெய்னர் வேயிஸ் ஜெர்மனியைச் சேர்ந்தவர்.


    Next Story
    ×