search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் நவாஸ் ஆஜர் - மகன்கள், மகளுக்கு பிடிவாரண்ட்
    X

    ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் நவாஸ் ஆஜர் - மகன்கள், மகளுக்கு பிடிவாரண்ட்

    ஊழல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் இன்று ஆஜரானார். சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாததால் அவரது இரு மகன்கள் மற்றும் மகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    இஸ்லாமாபாத்:

    நவாஸ் ஷெரீப், ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் பதவியையும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

    பாகிஸ்தான் சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் தலைவர் பதவி வகிக்க முடியாது என்பதால், நவாஸ் ஷெரீப் கட்சித் தலைவர் பதவி வகிக்கிற வகையில், அந்த நாட்டு பாராளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீப்பின் லாகூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி குல்சூம் நவாஸ் வெற்றி பெற்றார்.

    நவாஸ் ஷெரீப்பின் மனைவி புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டனில் இருந்த நவாஸ், இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய கணக்கியல் குழு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, தனது மனைவி சிகிச்சைக்காக லண்டன் செல்ல இருப்பதால் வழக்கின் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இரண்டு முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நவாஸ் ஷெரீப்பின் இரு மகன்கள் மற்றும் மகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனையடுத்து, இந்த வழக்கின் விசாராணை அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெறும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
    Next Story
    ×