search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசுப்பணிகளுக்காக சொந்த இ-மெயிலை பயன்படுத்தும் டிரம்ப் ஆலோசகர்கள் - பரபரப்பு தகவல்கள்
    X

    அரசுப்பணிகளுக்காக சொந்த இ-மெயிலை பயன்படுத்தும் டிரம்ப் ஆலோசகர்கள் - பரபரப்பு தகவல்கள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆலோசகர்கள் அரசுப்பணிகளுக்காக சொந்த இ-மெயிலை பயன்படுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்த போது உள்துறை செயலராக இருந்த ஹிலாரி கிளிண்டன் அரசுப்பணிகளுக்காக தனிப்பட்ட இ-மெயிலை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிட்டபோது முக்கிய விவாதமாக இந்த இ-மெயில் விவகாரம் இடம் பிடித்தது.

    ஹிலாரியின் தோல்விக்கு இந்த விவகாரம் முக்கிய காரணம் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போதைய அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களாக இருக்கும் 6 பேர் அரசுப்பணிகளுக்காக சொந்த இ-மெயிலை பயன்படுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    குறிப்பாக வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளராக இருந்த ரெய்ன்ஸ் மற்றும் முன்னாள் திட்டமிடல் குழு தலைவர் ஸ்டீவ் பன்னான் ஆகியோர் முக்கிய அரசுப்பணிகளை தங்களுடைய சொந்த இ-மெயிலை பயன்படுத்தி செய்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், டிரம்ப்பின் மருமகன் குஷ்னரும் வெள்ளை மாளிகையின் முக்கிய கோப்புகளை தனது இ-மெயில் மூலம் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து குடியரசுக்கட்சியினர் எவ்வித கருத்துக்களையும் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
    Next Story
    ×