search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா மீது போர் தொடுக்க உள்ளதாக கூறுவது நகைப்புக்கு உரியது: வெள்ளை மாளிகை அறிவிப்பு
    X

    வடகொரியா மீது போர் தொடுக்க உள்ளதாக கூறுவது நகைப்புக்கு உரியது: வெள்ளை மாளிகை அறிவிப்பு

    வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கப் போவதாக கூறுவது நகைப்புக்குரியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    நியூயார்க்:

    வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கப் போவதாக கூறுவது நகைப்புக்குரியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உலக நாடுகளின் கடும் கண்டனங்களையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இது அமெரிக்க அரசை எரிச்சலடைய செய்துள்ளது.

    இதற்கிடையே, எங்கள் மீது போர் தொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என வட கொரியா வெளியுறவுத் துறை மந்திரி ரி யாங் ஹூ தெரிவித்தது கடும் சர்ச்சையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், நாங்கள் போர் தொடுக்க போவதாக வட கொரியா கூறுவது நகைப்புக்குரியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், வட கொரியா மீது போர் தொடுப்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் போர் தொடுக்க உள்ளதாக கூறுவது நகைப்புக்கு உரியதாக உள்ளது என தெரிவித்தார்.
    Next Story
    ×