search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்: வடகொரியா மந்திரி தகவல்
    X

    எங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்: வடகொரியா மந்திரி தகவல்

    எங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார் என வடகொரியா வெளியுறவு துறை மந்திரி ரி யாங் ஹூ தெரிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    எங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார் என வடகொரியா வெளியுறவு துறை மந்திரி ரி யாங் ஹூ
    தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகள், உலக நாடுகளின் கடும் கண்டனங்கள் என எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து நைட்ரஜன் வெடிகுண்டு, ஏவுகணை சோதனையை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. இது அமெரிக்காவிற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், வடகொரியாவின் வெளியுறவு துறை மந்திரி ரி யாங் ஹூ நியூயார்க்கில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வடகொரியா மீது போர் தொடுக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். எங்களுக்கு எதிரான போரை முதலில் அமெரிக்காவே அறிவித்தது என்பதை ஒட்டுமொத்த உலக நாடுகளும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.  

    தற்கொலைப்படை தாக்குதல்கள் அப்பாவி அமெரிக்கர்களை பாதித்தால் அதற்கு டொனால்டு டிரம்ப்தான் பொறுப்பு. எங்கள் நாட்டிற்கு எதிராக அமெரிக்கா போரை அறிவித்துள்ள நிலையில், எதிர் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. வடகொரியாவின் வான் எல்லையில் பறக்கும் அமெரிக்காவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் எங்களுக்கு உரிமை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வடகொரியாவும், அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளை ஏவுகணை போல ஏவிவிடுவது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×