search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வலுவிழந்தது மரியா புயல்: தென்கிழக்கு அமெரிக்க கரையை இன்று கடக்கும் என அறிவிப்பு
    X

    வலுவிழந்தது மரியா புயல்: தென்கிழக்கு அமெரிக்க கரையை இன்று கடக்கும் என அறிவிப்பு

    அட்லாண்டிக் கடலில் உருவாகிய மரியா புயல் கடந்த ஒரு வாரமாக கரீபியன் தீவுகளை சூறையாடிய நிலையில் நேற்று வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நியூயார்க்:

    அட்லாண்டிக் கடலில் கடந்த வாரம் உருவாகிய மரியா புயல், கரீபியன் கடல் பகுதியில் உள்ள அனைத்து தீவுகளிலும் பலத்த சேதத்தை உண்டாக்கியது. டொமினிகா, ப்யூர்டோ ரிகோ ஆகிய தீவுகளில் மிகுந்த பேரழிவை மரியா புயல் ஏற்படுத்தியது. ஒன்றாம் வகை புயல் என அறியப்பட்ட மரியா, தற்போது வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க தேசிய புயல் மையம் வெளியிட்டுள்ள தகவல் படி, மரியா புயல் வலுவிழந்ததாகவும் இன்னும் 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அமெரிக்க கடல் பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், கேப் ஹாட்டெர்ஸ், தெற்கு கராலினா மாணத்தில் மழை பெய்யலாம் என்றும் கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×