search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மன் பொது தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் 4-வது முறையாக அபார வெற்றி
    X

    ஜெர்மன் பொது தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் 4-வது முறையாக அபார வெற்றி

    ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்படுகிறார்.
    பெர்லின்:

    ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்படுகிறார்.

    ஜெர்மனி நாடாளுமன்றத்தில் மொத்தம் 598 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல்  நடைபெற்றது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவடைந்தது.



    கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஷூல்ஸ்சும் போட்டியிட்டனர். இவர்கள் தவிர இன்னும் ஐந்து பேர் தேர்தல் களத்தில் இருந்தனர்.

    வாக்குப்பதிவுக்கு பின்னர் நடத்திய கருத்துக்கணிப்பில் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் நான்காவது முறையாக அதிபராக பதவி ஏற்பார் என தெரிய வந்தது.

    இந்நிலையில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

    இந்த வெற்றி குறித்து ஏஞ்சலா மெர்கல் கூறுகையில், இதைவிட அதிக சதவீதம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனாலும், தேர்தலில் வெற்றி பெற்றது மிகுந்த சந்தோஷமே என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×