search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக்கில் சலாகுதினீல் 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிப்பு
    X

    ஈராக்கில் சலாகுதினீல் 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிப்பு

    ஈராக்கில் சலாகுதினீல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலின் முடிவில் 200க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் ஷாகீர் ஜாவ்தத் நேற்று அறிவித்தார்.
    பாக்தாத்:

    ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிடி, கொஞ்சம் கொஞ்சமாய் தளர்ந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு சலாகுதீன் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டின் ராணுவம் ஈடுபட்டது. கடும் தாக்குதல்களை கடந்த புதன்கிழமை முதல் தொடுத்து வந்தது. இந்த தாக்குதல்களின் முடிவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 200-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என லெப்டினன்ட் ஜெனரல் ஷாகீர் ஜாவ்தத் நேற்று அறிவித்தார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சலாகுதீன் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து 480 ச.கி.மீ. பரப்பளவை ராணுவம் மீட்டுள்ளது. 41 கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் தளவாடங்களும் அழிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

    இதற்கிடையே கிர்குக் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு ஈராக் படைகள் நேற்று புதிய தாக்குதல்களை தொடங்கி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இதுபற்றி ராணுவ நடவடிக்கைகள் கமாண்டர் அப்துல் அமீர் யாரல்லா கூறுகையில், “அஜ்ஜாவியா, அல் நாமல் ஆகிய பிராந்தியங்களில் பதுங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து புதிய தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

    Next Story
    ×