search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா. சபையில் சுஷ்மா பேச்சு
    X

    பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா. சபையில் சுஷ்மா பேச்சு

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி வருகிறது என ஆவேசமாக பேசினார்.
    ஐ.நா.சபை:

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி வருகிறது என ஆவேசமாக பேசினார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியா சார்பாக வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்றைய 21-ம் நூற்றாண்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஐ.நா.சபை மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த சீர்திருத்தத்திற்கான பேச்சுக்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வருகின்றன.

    கருப்பு பணத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகவும் துணிச்சலான முடிவு பணமதிப்பிழப்பு நடவடிக்கை.

    இந்தியா அறிஞர்களையும், டாக்டர்களையும், உருவாக்குகிறது. அதற்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொகமது, ஹிஸ்புல் முஜாஹிதின் உள்பட பல தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி வருகிறது.

    கடந்த கூட்டத்தில் 160 நாடுகள் ஆதரவு தெரிவித்த தீர்மானத்தின் அடிப்படையில் விவாதங்களை நடத்த துவங்க வேண்டும். இது முன்னுரிமை கொண்டதாக இருக்க வேண்டும். அது நடந்தால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    இதேபோன்ற கோரிக்கையை சமீபத்திய ஜி-4 மாநாடும் கேட்டுக் கொண்டது. இந்தியா ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×