search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச தடை எதிரொலி: வடகொரியாவில் பெட்ரோல்,டீசல் விலை கிடுகிடு உயர்வு
    X

    சர்வதேச தடை எதிரொலி: வடகொரியாவில் பெட்ரோல்,டீசல் விலை கிடுகிடு உயர்வு

    சர்வதேச நாடுகள் விதித்த பொருளாதார தடை காரணமாக வடகொரியாவில் பெட்ரோல் விலை கிடுகிடுவென 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

    பியாங்யாங்:

    வட கொரியா சமீபத்தில் 6-வது அணு ஆயுத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்தது. அமெரிக்காவை தொடர்ந்து தற்போது சீனாவும் வட கொரியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்த தடைகளை ஐ.நா. சபையும் ஆதரித்துள்ளது. அந்நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக முற்றிலுமாக நிறுத்திவிட்டன.
    அதோடு வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மற்ற பொருட்களையும் பல்வேறு நாடுகள் முற்றிலும் நிறுத்திவிட்டன. இதனால் வடகொரியாவில் பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. 

    இதன்காரணமாக பெட்ரோல் விலை சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை காரணமாக அத்யாவசிய பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.

    வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைப்பதுடன், வடகொரியா உற்பத்தி செய்யும் ஆடைகளை வாங்க முற்றிலுமாக தடை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×