search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சூப்பர் மலேரியா நோய் பரவுகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
    X

    தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சூப்பர் மலேரியா நோய் பரவுகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

    தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘சூப்பர் மலேரியா’ நோய் வேகமாக பரவி வருகிறது. அது சர்வதேச நாடுகளையும் ஆக்ரமிக்கும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    லண்டன்:

    மலேரியா என்ற உயிர்க்கொல்லி நோய் கொசுக்களால் பரவுகிறது. இந்த நோய்க்கு ஆண்டு தோறும் 21 கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

    மலேரியா நோய் தாக்குதலுக்கு ஏராளமான குழந்தைகள் பலியாகி வருகின்றனர். எனவே அந்த நோயை ஒழிக்க மருந்து மாத்திரைகள் கண்டு பிடித்து அவை பயன்படுத்தப்படுகின்றன. இருந்தும் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘சூப்பர் மலேரியா’ நோய் வேகமாக பரவி வருகிறது. அது சர்வதேச நாடுகளையும் ஆக்ரமிக்கும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கம்போடியாவில் உருவான இந்த நோய் தற்போது தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. தெற்கு வியட்நாமிலும் இது அதிவேகமாக பரவி வருகிறது.

    ‘சூப்பர் மலேரியா’வுக்கு நோய் எதிர்ப்பு மருந்து எடுத்துக் கொண்டாலும் அது குணமடையவில்லை. தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளை தாக்கும் இந்நோய் அடுத்தபடியாக ஆப்பிரிக்காவை சென்றடையும் என அஞ்சப்படுகிறது. ஆக்ஸ்போர்டு மருத்துவ சிகிச்சை குழுவினர் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் முகாமிட்டு நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.
    Next Story
    ×