search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் பாலி தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்
    X

    இந்தோனேசியாவில் பாலி தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்

    இந்தோனேசியாவில் பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை வெடிக்கும் நிலையில் உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இறுதியாக கடந்த 1963-ம் ஆண்டு வெடித்தது. அதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு இது மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது. இப்போதே அதில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே உயிரிழப்பு மற்றும் சேதங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆகங் எரிமலையை சுற்றி 9 கி.மீட்டர் தூரத்தில் தங்கியிருக்கும் பொது மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியேறாதவர்கள் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் எரிமலை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலி தீவில் உள்ள தென்பசார் சர்வதேச விமான நிலையமாகும். இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×