search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துருக்கி: கருங்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி
    X

    துருக்கி: கருங்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி

    உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்டு ரோமானியாவை நோக்கி அகதிகள் சென்ற படகானது கருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    அங்காரா:

    உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் செய்கின்றனர். இதனால், மத்தியதரைக் கடல், கருங்கடல் பகுதிகளில் படகுகள் மூழ்கி அகதிகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில், துருக்கி அருகே கருங்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரோமானியாவை நோக்கி அந்த படகு சென்றிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 70 பேர் பயணித்த படகு மூழ்கியதில் 15 பேர் பலியாகியுள்ளனர். 40 பேர் துருக்கி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும், 10 லட்சம் அகதிகள் ஆபத்தான முறையில் கடல் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அப்போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் கடலில் மூழ்கி பலியாகி உள்ளனர்.
    Next Story
    ×