search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிம் ஜாங்-உன் ஒரு பைத்தியகாரர், தனது மக்களை பட்டினி போட்டே கொன்றுவிடுவார் - டிரம்ப்
    X

    கிம் ஜாங்-உன் ஒரு பைத்தியகாரர், தனது மக்களை பட்டினி போட்டே கொன்றுவிடுவார் - டிரம்ப்

    வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ஒர் பைத்தியகாரர், பட்டினி போட்டே தனது மக்களை கொன்றுவிடுவார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்: 

    வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன் உலக நாடுகள் கடும் எதிர்ப்பை மீறி அணு சோதனை, மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு மிரட்டி வருகிறார். கடந்த செப் 3-ம் தேதி வரை 6 முறை அணு சோதனைகளையும், ஒரே ஆண்டில் 12 ஏவுகணை சோதனைகளையும் நடத்தியுள்ளார். வடகொரியாவை கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான பல தடைகளை விதிப்பதற்கான தீர்மானத்தை, ஐ.நா., சபையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில், அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று ஐ.நா. பொதுச்சபையில் பேசிய அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், வடகொரியாவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    இதற்கு பதிலடி கொடுத்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்கா மன சோர்வு அடைந்துவிட்டது. அதன் தலைவர் ஒரு வயதான முதியவர், குரைக்கும் நாய் கடிக்காது எனறார். மேலும் வடகொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனநலம் சரியில்லாதவர் என அவர் விமர்சித்துள்ளார்.

    இதற்கு பதிலடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கிம் ஜாங் உன்னை விமர்சித்தார். அதில் "வடகொரியா அதிபர் ஒரு பைத்தியகாரன், அவரது செயல்பாடு மூலம் தன்நாட்டு மக்களையே பட்டினி போட்டு கொன்று விடுவார். இது தான் அந்த நாட்டில் நடக்கபோகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு அவரை சோதிப்போம்", என்றார்.


    Next Story
    ×