search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்ட்டோ ரிகோ தீவை துவம்சம் செய்த மரியா புயல்: 32 பேர் பலியானதாக தகவல்
    X

    போர்ட்டோ ரிகோ தீவை துவம்சம் செய்த மரியா புயல்: 32 பேர் பலியானதாக தகவல்

    அட்லாண்டிக் கடலில் உருவான மரியா புயல் கரீபியன் தீவுகளை தாக்கியதை அடுத்து போர்ட்டோ ரிகோ தீவை துவம்சம் செய்துள்ளது. 32 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    நியூயார்க்:

    அமெரிக்கா அருகே அட்லாண்டிக் கடலில் ‘மரியா’ புயல் உருவானது. இப்புயல் டொமினிகா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல தீவுகளை துவம்சம் செய்தது. இதனால் 32 பேர் மரணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் மரியா புயலின் தாக்கத்தினால் போர்ட்டோ ரிகோ தீவு கடுமையான பாதிப்புக்குள்ளானது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீவின் தலைநகரான சன் ஜூயானிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள டோயா பாஜாவில் மட்டும் 8 பேர் நீரில் மூழ்கி இறந்ததாக அந்நகர மேயர் தெரிவித்தார். மேலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் ரிகோ தீவில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் சாலைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. நேற்று மீட்பு பணிகளுக்காக மட்டும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சில விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து மரியா புயல் டர்க்ஸ் மட்டும் கைகோஸ் தீவுகளை தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கா புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×