search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்னாப்ரிக்காவில் அடுத்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்க இருப்பதாக அறிவிப்பு
    X

    தென்னாப்ரிக்காவில் அடுத்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்க இருப்பதாக அறிவிப்பு

    பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் பங்கேற்கும் 10-வது உச்சி மாநாடு அடுத்த ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெறும் என உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    நியூயார்க்:

    பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் பங்கேற்கும் 10-வது உச்சி மாநாடு அடுத்த ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெறும் என உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் உச்சி மாநாடு கூடுகிறது.

    நடப்பு ஆண்டுக்கான கூட்டம் சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் நடைபெற்றது. இதில், மேற்கண்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், நியூயார்க் நகரில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், 2018-ம் ஆண்டுக்கான 10-வது உச்சி மாநாடு தென்னாப்ரிக்காவில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், சர்வதேச தீவிரவாதத்தின் மீதான விரிவான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வது என்றும் கூட்டாக முடிவு எடுக்கப்பட்டது.
    Next Story
    ×