search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடலில் நீளமான கம்பி பாய்ந்த பிறகும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த இரும்பு மனிதர்
    X

    உடலில் நீளமான கம்பி பாய்ந்த பிறகும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த இரும்பு மனிதர்

    சீனாவில் செங்டு நகரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி நீளமான கம்பி உடலில் பாய்ந்த பிறகும் உயிருடன் இருப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் செங்டு நகரைச் சேர்ந்த 37 வயது கட்டிட தொழிலாளி, கடந்த 18-ம் தேதி வேலைப்பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென இடி மின்னல் ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர், கால் தவறி அருகில் இருந்த இரும்பு கம்பி மீது விழுந்தார். இதில் அவரது உடலில் தோள்பட்டை வழியாக 2 மீட்டர் அளவிற்கு கம்பி குத்தி வெளியே வந்துள்ளது.

    அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 7 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் அவர் உடலில் இருந்த கம்பியை அகற்றினர். மேலும், இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    நோயாளியின் எக்ஸ்ரே பரிசோதனை விவரத்தை மருத்துவர்கள் இன்று வெளியிட்டனர். அதனை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். 2 மீட்டர் கம்பி உடலில் பாய்ந்த நிலையிலும் அவரின் முக்கியமான உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படவில்லை. அவரின் ரத்த ஓட்டமும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×