search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக ஊடகங்களில் இஸ்லாம் மதத்திற்கு எதிரான வார்த்தைகள் பயன்படுத்த தடை - சீன அரசு உத்தரவு
    X

    சமூக ஊடகங்களில் இஸ்லாம் மதத்திற்கு எதிரான வார்த்தைகள் பயன்படுத்த தடை - சீன அரசு உத்தரவு

    சீனாவில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் இஸ்லாம் மதத்திற்கு எதிரான வார்த்தைகள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
    பீஜிங்:

    சீனாவில் 21 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் ஷின்சியாங் மற்றும் நிங்சியா மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்நிலையில், முஸ்லீம்களுக்கு எதிரான இஸ்லாமாபோபிக் எனப்படும் வார்த்தை இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இது முஸ்லீம் மக்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. அவர்கள் இதுகுறித்து புகார் கொடுத்தனர். இதையடுத்து முஸ்லீம்களுக்கு எதிரான வார்த்தைகளை இணையதளங்களில் பயன்படுத்தக் கூடாது என சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனால் இணையத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வார்த்தைகள் மற்றும் கிரீன் ரிலிஜியன், பீஸ் ரிலிஜியன் போன்ற வார்த்தைகளை தேடும் போது அதற்கான விடை கிடைப்பதில்லை. இதைத்தொடர்ந்து சீன மக்கள் அரசாங்கம் முஸ்லீம்களுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் அளித்து வருகின்றனர். மேலும் மக்களின் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சீனா பல்கலைக்கழக பேராசிரியர் பேசுகையில், இது மக்களின் சுதந்திரத்தை பறிப்பதன்று. சீன அரசின் முடிவை இணைய பயனர்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். மேலும், சீன மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு எனவும் கருதுகின்றனர். இது தவறானதாகும். சீன அரசு எப்போதும் முஸ்லீம் மக்களுக்கு நல்லது செய்து வருகிறது. அவர்கள் புனித மெக்கா பயணம் மேற்கொள்வதற்கும், ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்கும் அரசு பல உதவிகள் செய்து வருகிறது’ எனக் கூறினார்.

    Next Story
    ×