search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்சிகோ நிலநடுக்கத்தில் இந்தியர்கள் பாதிப்படையவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்
    X

    மெக்சிகோ நிலநடுக்கத்தில் இந்தியர்கள் பாதிப்படையவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்

    மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், அங்குள்ள இந்திய தூதரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய மெக்சிகோ மற்றும் தலைநகர் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் இந்த நில அதிர்வால் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 225 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும், மீட்பு நடவடிக்கைகள் முழுமையடையாத நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் நிலநடுக்கத்தால் மெக்சிகோ நாடே சோகத்தில் திளைத்து வருகிறது.

    இந்நிலையில், ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், அங்கிருந்து மெக்சிகோவுக்கான இந்திய தூதரை தொடர்புகொண்டு பேசியதாகவும், இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×