search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்சிகோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குகிறது கூகுள்
    X

    மெக்சிகோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குகிறது கூகுள்

    சுமார் 225 பேர் வரை பலிகொண்ட மெக்சிகோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
    கலிபோர்னியா:

    சுமார் 225 பேர் வரை பலிகொண்ட மெக்சிகோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குவதாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய மெக்சிகோ மற்றும் தலைநகர் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் இந்த நில அதிர்வால் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 225 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும், மீட்பு நடவடிக்கைகள் முழுமையடையாத நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் நிலநடுக்கத்தால் மெக்சிகோ நாடே சோகத்தில் திளைத்து வருகிறது.

    மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் 3 மில்லியன் மக்கள் நிலை குலைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூகுள் நிறுவனத்தின் சார்பில் நிவாரண நிதியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை புரட்டியெடுத்த இர்மா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதே போல் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண நிதி கூகுள் நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×