search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனது மரணத்தை யூகித்த ஆசிரியை கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொலை
    X

    தனது மரணத்தை யூகித்த ஆசிரியை கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொலை

    தனது மரணம் நெருங்குவதாகவும் கடற்கொள்ளையர்களால் நான் கொல்லப்படுவேன் எனவும் கணித்த பிரிட்டன் பள்ளி ஆசிரியையின் யூகம் பலித்துள்ளது.
    லண்டன்:

    பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் எம்மா கெல்டி (வயது 43). தலைமை ஆசிரியையாக பாணியாற்றிய இவர் உலகை சுற்றிப் பார்க்கும் ஆசையில் படகின் மூலம் கடல்வழியாக பயணம் செய்யத் தொடங்கினார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி தனது டுவிட்டரில் அவர் ஒரு பகீர் தகவலை வெளியிட்டிருந்தார்.

    ‘அமேசான் பகுதியில் எனது படகை பறித்துக் கொள்வார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்... நல்லது’ என அவர் வெளியிட்டிருந்த பதிவு, உறவினர்களைக் கதிகலங்க வைத்தது.

    பிரேசில் நாட்டில் தான் தற்போது கடல் பகுதியில் படகில் பயணம் செய்யும் வழியில் கடற்கொள்ளையர் கூட்டம், பயங்கரமான ஆயுதங்களுடன் நடமாடி வருவதால் தனது அச்சத்தை இவ்வாறு அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்நிலையில், அவர் யூகித்தது போலவே, பிரேசில் நாட்டில் உள்ள தீவுப் பகுதியான லாரோ சோட்ரே பகுதியில் அவரது படகை வழிமறித்த வாட்டர் ரேட்ஸ் எனும் கடற்கொள்ளையர்கள், எம்மா கெல்டியை சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது செல்போன், டேப்லெட், கம்ப்யூட்டர் மற்றும் அதிநவீன கேமரா ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக 17 வயது கொள்ளையனை பிரேசில் போலீசார் கைது செய்துள்ளனர்.
    Next Story
    ×