search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரியா புயலால் பாதிக்கப்பட்ட கரீபியன் நாடுகளுக்கு இந்தியா 2 லட்சம் டாலர் நிதி உதவி
    X

    மரியா புயலால் பாதிக்கப்பட்ட கரீபியன் நாடுகளுக்கு இந்தியா 2 லட்சம் டாலர் நிதி உதவி

    மரியா புயலால் பாதிக்கப்பட்ட கரீபியன் நாடுகளுக்கு இந்திய அரசின் சார்பில் அவசர நிவாரண உதவித்தொகையாக 2 லட்சம் டாலர் வழங்கப்படும் என சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    வடஅமெரிக்கா அருகே உள்ள கரீபியன் கடல் பகுதியில் உள்ள டொமினிகா என்ற தீவு நாட்டை சமீபத்தில் மரியா புயல் கடுமையாக தாக்கியது.

    புயலுடன் சேர்ந்து பலத்த மழையும் பெய்ததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே வீடுகளில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட  கரீபியன் நாடுகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 2 லட்சம் டாலர் நிதி உதவி அளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க நகருக்கு சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×