search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: தீவிரவாதி ஹபீஸ் சயீத் அறிவிப்பு
    X

    பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: தீவிரவாதி ஹபீஸ் சயீத் அறிவிப்பு

    பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக ஜமாஅத் உத் தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளான்.
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாஅத் உத் தாவா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத், இந்தியாவின் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களின் மூளையாக இருந்து செயல்பட்டவன். இவனது தலைக்கு அமெரிக்க அரசு 10 லட்சம் டாலர்கள் பரிசு அறிவித்துள்ளது.

    இதற்கிடையில் மில்லி முஸ்லிம் லீக் என்ற புதிய அரசியல் கட்சியை கடந்த மாதம் ஹபீஸ் சயீத் தொடங்கினான். சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப்பின் மனைவி போட்டியிட்ட பாராளுமன்றத் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு ஹபீஸ் சயீத், ஆதரவு தெரிவித்திருந்தான். ஆனால், நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் நவாஸ் ஷெரீப் மனைவி வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள்தோல்வியைத் தழுவினர்.

    இந்த தோல்வியைப்பற்றி சிறிதும் கவலைப்படாத ஹபீஸ் சயீத், அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக இன்று தெரிவித்துள்ளான்.

    மில்லி முஸ்லிம் லீக் என இக்கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. எனினும், முறையாக இந்தக் கட்சிக்கான அங்கீகாரத்தை பாகிஸ்தான் நாட்டின் தலைமை தேர்தல் கமிஷன் இன்னும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×